அண்மைய செய்திகள்

recent
-

நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது பொறுப்பாகும்!- பிரதமர்


நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மானுட கௌரவத்தை பாதுகாத்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.

நாட்டை மறுசீரமைக்கும் மிகப் பெரிய சாவல் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்களின் அபிலாஷைகள் வெற்றிகொள்ளப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் 2016ம் ஆண்டு மலர்ந்துள்ளது.

அழுத்தங்கள், அடக்குமுறைகள் இன்றி புத்தாண்டை வரவேற்கக் கிடைத்துள்ளமை எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

தற்போது நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல், இன மத பேதங்களைக் களைந்து நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமிது.

மலர்ந்திருக்கும் ஆண்டில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்தி அனைவரினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய பின்னணியை உருவாக்குவது எமது நோக்கமாகும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டை மறுசீரமைக்க வேண்டியது எமது பொறுப்பாகும்!- பிரதமர் Reviewed by Author on January 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.