ரெய்னாவிடம் தோற்றது ஏன்? டோனி விளக்கம்.....
ஐபிஎல் தொடரில் ரெய்னா தலைமையிலான குஜராத் அணியிடம் தோற்றது பற்றி புனே அணியின் தலைவர் டோனி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ்- ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பின்ஞ், மெக்கல்லம் ஆகியோரின் அதிரடியால் புனே அணியின் 164 ஓட்டங்கள் இலக்கை எளிதாக எட்டிய குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி குறித்து புனே அணியின் தலைவர் டோனி கூறுகையில், எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கவில்லை.
நான் அவர்களிடம் சில விடங்களை கூறி இருக்கிறேன், கண்டிப்பாக அந்த விடயங்கள் அணிக்கு தேவையான ஒன்று. சிறந்த வீரர்களை அடையாளம் காண்பது அவசியம் என்று நினைக்கிறேன்.
முதல் போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் இந்தப் போட்டியில் மற்ற சில வீரர்களும் விளையாடி இருக்கலாம். இது புதிய அணியாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அணியில் அதிரடி காட்டக் கூடிய சகலதுறை வீரர்களும்இல்லை என்று கூறியுள்ளார்.
ரெய்னாவிடம் தோற்றது ஏன்? டோனி விளக்கம்.....
Reviewed by Author
on
April 15, 2016
Rating:
Reviewed by Author
on
April 15, 2016
Rating:


No comments:
Post a Comment