அண்மைய செய்திகள்

recent
-

பேரழிவிலும் ஜாதி பேதத்திற்கு முதலிடம்!

இயற்கை என்பது ஜாதி, மத, பேதங்களைக் கடந்து அனைவருக்கும் ஒரே விதமான பாதிப்பையே ஏற்படுத்திச் சென்றது.
திடீர் அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு நம்நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புக்கள் வழக்கம் போல் தங்கள் இனத்துவேசத்தை காட்டிச் செயல்படுவதான சில சம்பவங்கள் அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மாவனல்லை – அரநாயக்க சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக விபத்துக்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதன் பொருட்டு மாவனல்லை, கேகாலை பிரதேச மக்கள், அரசியல், ஜாதி பேதமில்லாது மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
ஆனால், மாவனல்லை ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டாளர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்டத் தலைவரான அமைச்சர் கபீர் ஹாசிம் இது தொடர்பாக எந்தவொரு அவதானிப்பையும் செலுத்தவில்லை என்பதோடு,
அவரது ஏற்பாட்டில் மாவனல்லை, கேகாலை விற்பனை முகவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நன்கொடை பண்டங்கள் தமது ஆசனத்திற்கு உரித்தான அரநாயக்க பிரதேச மக்களுக்கு வழங்கப்படாமல்,
கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்களை அண்டிய பிரதேங்களில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களுக்கென ஏற்பாடு செய்யப்படும் வேலைத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென தெரியவருகிறது.
அத்தோடு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பு கொழும்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படகுச் சேவையொன்றை செயற்படுத்தியதோடு இதில் அவர்கள் முஸ்லிம் மக்களை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் ஜாதி, மத பேதமின்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும்போது முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள் இவ்வாறு இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயற்படுவது வெட்கப்படவேண்டிய விடயம் என்பதோடு,
விசேடமாக அரச அமைச்சரொருவர் மற்றும் மக்கள் பிரதிநிதியொருவர் தம் பிரதேசத்தை அண்டி வாழும் மக்களை கருத்திற்கொள்ளாது மனிதத்துவத்தை பின்தள்ளிவிட்டு இனவாதத்திற்கு முன்னுரிமையளித்து செயல்படுவதானது மனிதத்துவத்தை நேசிக்கும் யாவருக்கும் சலிப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது என சம்பவங்களை அவதானித்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

பேரழிவிலும் ஜாதி பேதத்திற்கு முதலிடம்! Reviewed by NEWMANNAR on May 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.