மாந்தை மேற்கு பிரதேசசெயலகத்தில் உள்ள வாகனம் சார்ந்த ஆவணங்களை
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசசெயலகத்தில் உள்ள வாகனம் சார்ந்த (Tax-வரி)ஆவணங்களைப்பெறும் பகுதியானது பயணாளிகளுக்கு எற்றதாக இல்லை பயணாளிகள் வெளிப்பகுதியானது மழையாலும் வெயிலிலும் தாங்கக்கூடிய மேற்கூரையின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றதாக எமது இணையத்திற்கு முறைப்பாடு வந்ததையிட்டு.....
நாம் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திருவாளர்.M.ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்களை தொடர்பு கொண்டு மக்களின் முறைப்பாட்டை தெரிவித்த போது உண்மையான விடையம் தான் அந்தப்பகுதிக்கான வேலைத்திட்ம் ஓரிருநாட்களில் முடிந்துவிடும்.
அந்ததிருத்தும் வேலைகள் முடிவதற்குள் பயணாளிகள் முன்னரங்க அலுவலகம் அதாவது Front Cointer வரவேற்பு பகுதியில் கவுண்டர் உள்ள அலுவலகரிடம் தமது ஆவணங்களை கொடுத்து தமது தேவையினை பூர்த்தி செய்துகொள்ளலாம் சில அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம். விரைவில் எமது அலுவலகத்தின் சின்ன சின்ன பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முழுமையான சேவையை வழங்குவோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாந்தை மேற்கு பிரதேசசெயலகத்தில் உள்ள வாகனம் சார்ந்த ஆவணங்களை
Reviewed by Author
on
November 16, 2016
Rating:

No comments:
Post a Comment