அண்மைய செய்திகள்

recent
-

புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

 ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 


மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று (05) மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். 

எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும், QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறினார். 

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான். 

இதனால் உடனடி நடவடிக்கையாக QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறையை அறிமுகப்படுத்தினோம். 

புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தோம். தற்போது வரிசைகளை இல்லாமல் செய்துள்ளோம். QR மற்றும் ஒற்றை-இரட்டை முறைமைகள் தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன. 

இன்னும் சில நாட்களில் அந்த முறைகள் தேவையில்லை என்றால், அவற்றை நீக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். 

புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானதும் தேவையேற்படும் போது மீண்டும் வேலைகளை ஆரம்பிப்போம். 

எரிபொருள் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே அந்த நேரத்தில் அத்தகைய முடிவுகளை எடுத்தோம். ஆனால் இப்போது அச்சப்படத் தேவையில்லை. 

ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 கப்பல்கள் வரவுள்ளன என அவர் தெரிவித்தார்.






புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்! Reviewed by Vijithan on April 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.