வட, கிழக்கு தனிநாடா? இராணுவமயமாக்கலால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி....
இலங்கையின் வடக்கு கிழக்கு இன்னமும் வேறு நாடாகவே பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா நகரங்களுக்கு தற்போது சென்றாலும், வேறொரு நாட்டிற்கு சென்றதனை போன்றதொரு உணர்வே தோன்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட, கிழக்கு பகுதியில் காணப்படும் தகவல் தொடர்பாடல் சேவையின் செயற்பாடு நூற்றுக்கு 90 வீதம் மோசமாக காணப்படுவதே அதற்கு காரணமாகும்.
இந்தப் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் கையடக்க தொலைபேசிக்கான சிக்னல் தெளிவாக இல்லை. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இணைய பாவனைக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒருவர் வட,கிழக்கு பகுதிக்கு சென்று ஒரு வாரம் தங்கினால் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணமே தோன்றும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் போது, தொலைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் தொலைப்பேசி தொடர்புகளை வழங்கும் கோபுரங்களை அந்த பிரதேசங்களில் நிர்மாணிப்பதற்கு விரும்பாமையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் சேவை வழங்கும் நிறுவனங்கள் அரசாங்க இடங்கள் மற்றும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ள, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள இடங்களில் கோபுரங்கள் நிர்மாணிக்க விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
இராணுவத்தினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள காணிகளில் அவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முதலீட்டிற்கு ஆபத்தாகி விடும் என அவர்கள் எண்ணியுள்ளனர்.
இலங்கையின் முழுமையான நிலப்பரப்பு தொடர்பில் அவதானம் செலுத்தினால் அரைவாசி காணி அரசாங்கத்திற்கு சொந்தமானவையாகும். இந்த நிலைமை வடக்கு கிழக்கில் விசேட நிலைமையில் செயற்படுகின்றது. யுத்தத்தின் போது தமிழ் மக்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட அதிகமான இடங்கள் இன்னமும் இராணுவத்தினரின் அதிகாரத்தின் கீழே காணப்படுகின்றது.
இன்று வரையில் எவ்வளவு காணி முப்படையினர் வசம் உள்ளதென்பது யாருக்கும் தெரியாது. இது தொடர்பில் உண்மையான தகவல் அதிகாரிகளினால் வெளியிடப்படும் என்பதனை எதிர்பார்ப்பது கடினமான விடயமாகும்.
இதன் காரணமாகவே வடக்கு, கிழக்கில் தொலைப்பேசி கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவில்லை என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வட, கிழக்கு தனிநாடா? இராணுவமயமாக்கலால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி....
Reviewed by Author
on
April 29, 2017
Rating:

No comments:
Post a Comment