அண்மைய செய்திகள்

recent
-

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு நனவாகின்றது!


தமிழீழ விடுதலைப் புலிகளினால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாய அமைசினால் கிளிநொச்சியில் கால்நடை பயிற்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கால்நடை பயிற்சி மையம் அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பல் வைத்தியசாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டிருந்த இடமாகும்.

மேலும், இந்த இடத்திற்கு விடுதலைப் புலிகள் "அறிவியல் நகரம்" எனறே பெயர் சூட்டியிருந்தனர். அந்த வகையில் விடுதலைப் புலிகளின் கனவுகள் நனவாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த பகுதிக்கான அபிவிருத்திகளை மிக வேகமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். எம்மிடம் இருக்கின்ற வளங்களை கொண்டு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு நனவாகின்றது! Reviewed by Author on April 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.