மன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் விழா-(படம்)
மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும், மறைமாவட்டப் பணி மையங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வளமும், நலமும், செழுமையும் தந்து வாழவைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இதனை கத்தோலிக்க மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு பணியகத்தில், மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி. சீ. ஜெயபாலன் அடிகளார் தலைமையில் ஞாயிறு திருப்பலியும் பெங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றன.
வேப்பங்குளம் தூய சூசையப்பர் பங்கில் பொங்கல் விழா 2018-01-14
மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தில் வேப்பங்குளம் தூய சூசையப்பர் பங்கில் இன்று பொங்கல் விழா சிறப்புத் திருப்பலியோடு இடம்பெற்றது.
மன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இன்று 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டதோடு, சிறப்பு திருப்பலியும் இடம் பெற்றது.
-குறித்த பொங்கல் விழா மற்றும் சிறப்பு திருப்பலியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள்,வர்த்தக நிலையங்கள்,என பல்வேறு இடங்களிலும் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிய குருமடத்தில் பொங்கல் பண்பாட்டுத் திருப்பலி
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளர் பண்பாட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார்.
சிறிய குருமட அதிபர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அனைத்து நிகழ்வுகளையும் சீராக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து மாணவர்களை பயிற்றுவித்திருந்தார்.
மன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் விழா-(படம்)
Reviewed by Author
on
January 14, 2018
Rating:

No comments:
Post a Comment