மன்னார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு -
இறுதி யுத்தத்தின் போது காயமடைந்து, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு தற்போது வசதியற்ற நிலையில் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உதவி வழங்கும் நிகழ்வு நேற்று மன்னார் பறப்பாங்கண்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பறப்பாங்கண்டலில் வசித்துவரும் டயானா என்ற பெண்ணிற்கே இவ்வாறு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டாளர் வெற்றிச் செல்வியின் வேண்டுகோளின் அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கம் சிறி சபா அறக்கட்டளை நிதிய அமைப்பினரால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களான மா.கதிர்காமராஜா,
செ. சபாநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு -
Reviewed by Author
on
August 24, 2018
Rating:

No comments:
Post a Comment