எந்த நடிகைகளுக்கு இல்லாமல் சமந்தாவுக்கு கிடைத்த பெருமை!
நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து மிகவும் பிசியாகிவிட்டார். அண்மையில் அவர் நடிப்பில் நடிகையர் திலகம், இரும்பு திரை என படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடியாக நடித்து சீமராஜா செப்டம்பர் 13 ல் விநாயர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இத்துடன் அவர் ஹீரோயினை மையப்படுத்திய கதையில் நடித்துள்ள யூ டர்ன் படமும் வெளியாகவுள்ளது. இதனோடு அவர் நடித்திருக்கிற நெஞ்சமெல்லாம் பல வண்ணம் படமும் வெளிவருகிறது.
இதில் அவருடன் மகேஷ்பாபு, வெங்கடேஷ், அஞ்சலி நடித்தள்ளனர். இதே கூட்டணியில் தெலுங்கில் எடுக்கப்பட்ட சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு என்ற படத்தின் தமிழ் டப் தான் இது. தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகைகளில் சமந்தாவுக்கு மட்டுமே இப்படி ஒரே நாளில் 3 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்த நடிகைகளுக்கு இல்லாமல் சமந்தாவுக்கு கிடைத்த பெருமை!
Reviewed by Author
on
August 22, 2018
Rating:

No comments:
Post a Comment