பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்லும் கூட்டமைப்பு ஒருபோதும் மகிந்தவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை!
கூட்டமைப்பு பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்கிறது, அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் வாழவேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் இந்த மண்ணிலே ஓர் இலட்சியம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் வேங்கைகளை விதை ஆக்கியவர்கள் நாங்கள்.
இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எமது கட்சியினுடைய தலைவர் இரா.சம்பந்தன், மஹிந்தவிடம் சென்று எங்கள் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை எழுத்து மூலம் தந்தால் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம் என தெரிவித்த போதிலும் அதனை மறுத்து விட்டார்.
இதேவேளை, கூட்டமைப்பின் ஆதரவு என்றும் மகிந்தவுக்கு இல்லை என்று இன்று சம்ப ந்தன் அறிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்லும் கூட்டமைப்பு ஒருபோதும் மகிந்தவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை!
Reviewed by Author
on
November 04, 2018
Rating:

No comments:
Post a Comment