பிரபஞ்சத்தில் மிக அழகான பெண் இவர் தானாம்: 2வது முறையாக விருது பெரும் அழகி -
பிரஞ்சு கால்பந்து வீரர் பேட்ரிக் ப்ளோன்டாவ் மற்றும் நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான லியோபிரியாவிற்கு பிறந்த மகள் தான் திலேன் ப்ளோன்டாவ் (17).
இவர் 4 வயதிலே மொடல் அழகியாக உருவெடுத்து, 6 வயதில் 'உலகில் மிக அழகிய பெண்' என அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் TC கேண்டலரின் வருடாந்திர விருதுகள் பட்டியலில் ஆண்டின் மிக அழகான 100 முகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பிரபலங்கள் பலரையும் பின்னுக்கு தள்ளி திலேன் ப்ளோன்டாவ் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள திலேன், இது என்னால் நம்பமுடியவில்லை ... @ tccandler மற்றும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நான் முதலிடம் பிடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
உங்கள் அனைவருக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த விடுமுறையை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை உங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் பலரும், இந்த பிரபஞ்சத்திலே அழகி நீங்கள் தான் என புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த பட்டியலில், அமெரிக்க-பிலிப்பைன்ஸ் நடிகை லிசா ஸ்ரோபரோனா நான்காவது இடத்தையும், இஸ்ரேலிய மொடல் யேல் ஷெல்பியா மூன்றாவது இடத்தையும், தைவானின் பாடகர் சாவ் ட்சு-யூ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முன்னதாக கடந்தாண்டு வெளியான பட்டியலில், திலேன் ப்ளோன்டாவ் இரண்டாமிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்சத்தில் மிக அழகான பெண் இவர் தானாம்: 2வது முறையாக விருது பெரும் அழகி -
Reviewed by Author
on
December 31, 2018
Rating:
No comments:
Post a Comment