அம்பானியை கோடீஸ்வரராக்கியது எது தெரியுமா?
இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார்.
இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் போற்றப்படும் திருபாய் அம்பானியின் மகன் ஆவார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது.
இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்குகிறார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 72.84 சதவீதம் அதிகரித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 40.1 பில்லியன் (2.65 லட்சம் கோடி ரூபாய்) டொலர்களாக அதிகரித்துள்ளது.
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலில் 33 இடத்தில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நான் தொழில்முனை பாடங்களை என் தந்தை திருபாய் அம்பானியிடம் தான் கற்றேன். அமெரிக்காவின் பட்டப்படிப்பை முடித்து விட்டு என் தந்தையிடம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் என்ன பொறுப்பை ஏற்கவேண்டும் என கேட்டேன்.
அவர் எனக்கு மேனேஜர் பொறுப்பை வழங்கினார். நாம் செய்யும் தொழிலில் வருமானத்தை மட்டுமே இலக்காக வைத்து பயணிக்க கூடாது.
வருமானத்தை இலக்காக வைத்தால் அது நம் கனவு தாகத்துக்கு தடையாக அமைந்து விடும்.சமூக மதிப்பை உருவாக்குவது தொழிலில் முக்கியமாகும், இதை முக்கிய இலக்காக கொண்டு தான் நான் செயல்படுகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தொழிலுக்கு ஆர்வமுள்ள ஒரு குழு நிச்சயம் தேவை. குழுவை அமைப்பது கஷ்டமான காரியம் தான்.
ஆனால் அதையும் மீறி நம் கனவுக்கு உதவி செய்யும் குழுவை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
ஒருபோதும் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது. நானும் பல தோல்விகளை சந்தித்த பின்னரே வெற்றியாளரானேன்.இதுவே அம்பானியின் வெற்றி ரகசியம் ஆகும்.
அம்பானியை கோடீஸ்வரராக்கியது எது தெரியுமா?
Reviewed by Author
on
December 21, 2018
Rating:

No comments:
Post a Comment