9 வயதில் டாக்டர் பட்டம் பெறும் வீரதமிழ்ச்சிறுமி !
தமிழகம் ,திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பிரிஷா என்ற 9 வயது மாணவி, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பிரிஷா இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று, நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
பிரிஷா அவரது ஒன்பது வயதிற்குள் 14 உலக சாதனையை யோகாவிலும், நீச்சலிலும் படைத்துள்ளார். இவர் மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.
பிரிஷாவின் திறமையைக் கண்டு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரிஷாவுக்கு ஏராளமான பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பிரிஷாவின் தாயாரும் யோகாவில் அனுபவம் உள்ளவர். இதனால் தாயின் அறிவுரையும் பிரிஷாவுக்கு உதவியை இருந்துள்ளது. மேலும், பிரிஷாவின் தாய், பாட்டி மூவரும் சேர்ந்து ஒரே சமயத்தில் நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்வதே அடுத்த சாதனை எனக் கூறியுள்ளார் பிரிஷா.
2019 ஜனவரி 26ஆம் தேதி பிரிஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. 9 வயதில் டாக்டர் பட்டம் பெறும் முதல் சிறுமி தமிழகத்தைச் சேர்ந்த பிரிஷா. இதனையடுத்து பலரும் பிரிஷாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

9 வயதில் டாக்டர் பட்டம் பெறும் வீரதமிழ்ச்சிறுமி !
Reviewed by Author
on
December 21, 2018
Rating:

No comments:
Post a Comment