இலங்கை ஜாம்பவான் முரளிதரனைப் போல் பந்துவீசிய இந்திய வீரர்..
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இந்திய வீரர் அம்பத்தி ராயுடு இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர் ஷமி சிறிது நேரம் விலகி இருந்ததால், அணித்தலைவர் கோஹ்லி பந்துவீசுவதற்கு ராயுடுவை அழைத்தார்.
ஆனால், அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு முறை விதிகளுக்கு உட்பட்டது தானா என்ற சந்தேகம் எழுந்தது. இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைப் போலவே அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சும் இருந்தது.


முரளிதரன் பந்துவீசிய காலத்தில், அவரது பந்துவீச்சு முறை விதிகளுக்கு உட்பட்டது இல்லை என்று கூறப்பட்டது. அதேபோல் தான் ராயுடுவும் சிக்கினார். அதனைத் தொடர்ந்து, 14 நாட்களுக்குள் பந்துவீச்சு பரிசோதனைக்கு வருமாறு அம்பத்தி ராயுடுவை ஐ.சி.சி கேட்டுக் கொண்டது.
ஆனால், அவர் பரிசோதனைக்கு வரவில்லை என்பதால் அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு பந்துவீச்சாளர் இல்லை என்பதால் இந்திய அணிக்கு இழப்பு ஏதும் இல்லை. மேலும் அவர் துடுப்பாட்டம் செய்வதிலும் எந்த சிக்கலும் இல்லை என்பதுடன், இந்த தடை தற்காலிகமானது தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த தடை உத்தரவை கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், இனிமேல் இந்தியாவுக்கு யார் 10 விக்கெட்டையும் எடுப்பார்கள்? என்றும், இவர் எப்போ பந்துவீச்சினார்? நான் பார்க்கவே இல்லையே என்றும் ட்விட்டர் பக்கங்களில் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
இலங்கை ஜாம்பவான் முரளிதரனைப் போல் பந்துவீசிய இந்திய வீரர்..
Reviewed by Author
on
January 29, 2019
Rating:
No comments:
Post a Comment