கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போகிறீர்களா? முதலில்
பெரும்பாலானோர் தங்களுக்கு அந்த சிகிச்சை திருப்திகரமாக இருப்பதாகக் கூறினாலும் ஏராளமானோர் நிரந்தரமாக பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
ஷோயிப் அஷ்ரஃப் தனது கிட்டப்பார்வை குறைபாட்டுக்காக லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது மருத்துவமனையில் வெறும் அரை மணி நேரம்தான் தங்கியிருந்தார். அப்படித்தான் லேசர் அறுவை சிகிச்சை குறித்து விளம்பரமும் செய்யப்படுகிறது, முப்பதே நிமிடங்களில் வீடு திரும்பி விடலாம் என்று.

ஐந்து வயது முதல் கண்ணாடி அணிந்து வந்த அஷ்ரஃப்க்கு கண்ணாடி மீது வெறுப்பு ஏற்பட்டது.
இன்னும் திருமணம் வேறு ஆகாதிருந்ததால், அதற்குமுன் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கண்ணாடியிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என விரும்பினார் அஷ்ரஃப்.
லேசர் சிகிச்சை செய்துகொண்டால் வாழ்க்கையே மாறிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த அஷ்ரஃப்க்கு வாழ்க்கை மாறத்தான் செய்தது ஆனால் நல்ல விதமாக அல்ல.
லேசர் சிகிச்சைக்குப்பின் அஷ்ரஃப்க்கு வலது கண்ணில், கண் பார்வை மங்கத்தொடங்கியது.

அதைவிட மோசம், இரண்டு கண்களிலும் வலி ஏற்பட்டது, நிரந்தரமாக. தூக்கம் தொலைந்து உடல் எடையும் குறையத் தொடங்கியது.
தனது பிரச்சினைகள் தொடர்பாக தனது மருத்துவரை அஷ்ரஃப் அணுக, அவரோ, கண்ணில் ஈரம் குறைவாக உள்ளது, எல்லாம் ஆறு மாதங்களில் சரியாகப்போய்விடும் என்றிருக்கிறார்.
அஷ்ரஃப் கண்ணில் ஏற்பட்டிருக்கும் வலிக்கு காரணம், லேசர் சிகிச்சையின்போது கருவிழிக்கு கீழுள்ள ஒரு அடுக்கு அகற்றப்படுகிறது.
இதன் பொருள் என்னவென்றால், கருவிழி செல்கள் இறுக்கமாக அமராமல் அவ்வப்போது அகன்று செல்கின்றன.
அவை அகலுவதால் கருவிழி நரம்புகள் வெளிப்படுவதால், வலி ஏற்படுகிறது. இந்த நரம்புகள், மொத்த மனித உடலின் நரம்புகளையும் ஒப்பிடும்போது உச்சகட்ட வலியை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

சிறிய சிகிச்சை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பி லேசர் செய்துகொண்ட அஷ்ரஃப் நிரந்தர வேதனையில் தவிக்கிறார்.
அஷ்ரஃப் மட்டுமின்றி இன்னும் பலரும் இந்த தாங்கொணா வேதனையால் தவிக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாகிய Jessica Starr, லேசர் சிகிச்சைக்குப்பின் ஏற்பட்ட வலி மற்றும் பார்வைக் கோளாறுகளைத் தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவின் FDAவில் பிரபல கண் மருத்துவராக பணியாற்றியவரும், லேசர் சிகிச்சையை முதன்முறையாக ஏற்றுக் கொண்ட மருத்துவக்குழுவின் தலைவராகவும் இருந்த Dr Morris Waxler, லேசர் சிகிச்சையின் பக்கவிளைவுகள் சரியாக விளக்கப்படுவதில்லை என்கிறார்.
கண்ணை வெட்டும்போது எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று நாங்கள் ஏமாற்றி நம்பவைக்கப்பட்டோம் என்று கூறும் Waxler, தற்போது லேசர் அறுவை சிகிச்சை தடை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
இந்நிலையில் கருவிழி செல்கள் அகன்றுபோவது ஒரு வழக்கமான பிரச்சினையாக கருதப்படாததால், அஷ்ரஃப் நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போகிறீர்களா? முதலில்
Reviewed by Author
on
February 06, 2019
Rating:
No comments:
Post a Comment