கமல்ஹாசனை கோபப்படுத்திய அந்த ஒரு கேள்வி!
கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவர் சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வருவார் என்பது ரசிகர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பு. அதே வேளையில் தேவர் மகன் 2 படம் பற்றியும் பேச்சுகள் அடிபடுகிறது. இதற்கிடையில் அவரின் அரசியல் வேலைகளும் ஒரு பக்கம் நடைபெற்றுவருகிறது.
அண்மையில் செய்தி சானல் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்ட அவர் தன்னிடம் சினிமாவில் நடித்துக்கொண்டு எப்படி முழு நேர அரசியல் வாதியாக முடியும் என கேட்கிறார்கள். அப்போது தான் மனதில் கோபம் வருகிறது.
சாராய பட்டறைகள் வைத்துக்கொண்டு அரசியல் செய்வோர் மத்தியில் தான் ஞாயமாக சம்பாதித்து வரி செலுத்தி வரும் என்னிடம் இப்படி கேட்கிறார்கள். இது போன்ற கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் சொன்னதை விட நல்ல பதிலை நான் சொல்கிறேன் என கூறியுள்ளார்.
கமல்ஹாசனை கோபப்படுத்திய அந்த ஒரு கேள்வி!
Reviewed by Author
on
February 10, 2019
Rating:

No comments:
Post a Comment