மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்-படங்கள்
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று புதன் கிழமை (13) காலை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று புதன் கிழமை (13) காலை 8 மணி முதல் 8.30 மணிவரை தமது பாடசாலைகளுக்கு முன்பாக கருப்பு பட்டி அணிந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-குறிப்பாக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019 ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்,ஆசிரியர்களின் மாண்பினை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போரட்டத்தின் பின் பாடசாலையின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்றமைகுறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
March 13, 2019
Rating:
Reviewed by Author
on
March 13, 2019
Rating:

No comments:
Post a Comment