30 பேரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரைவிட்ட வாயில்லா ஜீவன்:
உத்தரப்பிரதேசம் பண்டா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கீழ் தளத்தில் நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலையும், இரு மாடிகளிலும் உள்ள குடியிருப்பில் மக்களும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் குடியிருப்புவாசிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கீழ்தளத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலையில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு மெல்ல தீ பரவியுள்ளது.
அப்போது குடியிருப்புவாசிகள் வளர்க்கும் நாய் தொழிற்சாலை அருகே வாயில் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.
தீவிபத்து ஏற்பட்டதைப் பார்த்ததும் நாய் தொடர்ந்து சத்தமாக குரைக்கத் தொடங்கியுள்ளது.
நாயின் குரைப்புச் சத்தம் தொடர்ந்து அதிகரிக்கவே குடியிருப்பு வாசிகளில் ஒருவர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது, தீ மள மளவென கீழ்தளத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த குடியிருப்புவாசிகள் அனைவரும், வீட்டில் இருந்து தப்பி உயிர்பிழைத்துள்ளனர்.
ஆனால், தங்கள் உயிரைக் காப்பாற்றிய நாயை அந்த குடியிருப்பு வாசிகள் காப்பாற்றுவதற்குள் தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் தொழிற்சாலையின் அருகே கட்டப்பட்டு இருந்த நாய் இடிபாடுகளுடன் சிக்கி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தீ விபத்தில் இருந்து உயிர்தப்பிய மக்களை கண்கலங்க வைத்துள்ளது.
30 பேரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரைவிட்ட வாயில்லா ஜீவன்:
Reviewed by Author
on
April 14, 2019
Rating:

No comments:
Post a Comment