7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியானது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 65 ரன்களும், ஆண்ட்ரே ரஸ்செல் 45 ரன்களும் குவித்தனர்.
டெல்லி அணியில் கீமோ பால், ரபடா, மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஷிகர் தவான் 50 ரன்களை கடந்தார். இதற்கிடையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேறினார்.

அனைத்து போட்டிகளிலும் அதிரடி காட்டும் ரிஷப் பன்ட் வழக்கத்திற்கு மாறாக நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

46 ரன்கள் எடுத்திருந்த போது ரிஷப் பன்ட் அவுட்டாகி வெளியேற, இறுதிவரை மைதானத்தில் நிலைத்து நின்ற ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி!
Reviewed by Author
on
April 13, 2019
Rating:
No comments:
Post a Comment