பல்வேறு திறமைகளுடன் லண்டனில் போராடும் யாழ் இளைஞன்! கை கொடுக்குமா புலம்பெயர் தமிழ் தேசம்? -
சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்து மிகவும் வறுமைப்பட்ட ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் செல்வன் பாஸ்கரன் பாரத். இவர் தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி ஆவார். தாயார் பள்ளி ஆசிரியை மற்றும் யாழ்ப்பாண NGO எனும் அமைப்பின் உபதலைவராகவும் உள்ளார்.
சிறுவயதில் இருந்து நடனத்தில் ஆர்வம் கொண்ட அவர், பாடசாலை நிகழ்வுகளிலும், தனது நடனத்தினை வெளிக்காட்ட தவறியதில்லை. நடனம், நாடகம் மற்றும் சாரணர் அமைப்புகளிலும் ஆர்வம்கொண்ட இவர், தனது உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பயின்றார்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்தார். ஆனாலும், தனது கணினி மென்பொருள் படிப்பினை லண்டன் WEST END COLLEGE ல் பயின்றார்.
தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தனது கணினி தொழில்நுட்ப படிப்பினை இடைநிறுத்திவிட்டு நடனம் ஆடுவதில் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டதால் நடனப்பள்ளி ஆரம்பித்தார்.
பல சிறுவர்களை ஒன்றிணைத்து வகுப்புகள் நடத்தினார். அதனோடு தனியார் நிறுவனம் ஒன்றில் ADMINஆக வேலைப்பார்த்தார். பின் அவ்வேலைபழு காரணமாக நடனப்பள்ளியை பயிற்சிப்பதை இடைநிறுத்தினார்.
அந்த நேரம் வேலை இடத்தில் ஏற்பட்ட விபத்தினால் (கைமுறிவு) ஒரு ஆண்டு ஓய்வு எடுக்க வேண்டியதால் ஓய்வில் இருந்தார்.
இருந்தும் தனது திறமையினை வெளிப்படுத்த முனைந்த இவர், தனது கடின உழைப்பால் முன்னேறி இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு முதலாளி ஆனார்.
பின்னர் இவருக்கான விசா வழங்க லண்டன் அரசாங்கம் மறுக்கவே தனது இரண்டு வர்த்தக நிலையங்களையும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் இந்த துன்பத்திலும் துவண்டு விடாமல் தொடர்ந்தும் போராடி தனது விதிவிட உரிமையை லண்டன் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
பின்னர் தனது விடாமுயற்சியால் லண்டன் நோர்விச் எனும் பகுதியில் தனியார் நடனப்பள்ளியில் இலவசமாக நடனத்தை பயிற்றுவித்தார். தனது குடும்ப பொறுப்புக்களின் மத்தியிலும் சிறப்பாக திறம்பட செயற்பட்டார்.
பின்னர் லண்டன் றக்பி என்ற பகுதிக்கு சென்று அங்கு தனியார் வேலை நிலையத்தில் வேலைப்பார்த்து வருகின்றார். அத்தோடு Rugby தமிழ் பாடசாலையில் உயர் வகுப்பிற்கு ஆசிரியராக இணைந்து இன்று வரை பணியாற்றி வருகின்றார்.
அத்துடன் லண்டன் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தற்போதைய தலைவராகவும் திகழ்கின்றார். கிரிக்கெட் விளையாடில் கொண்ட ஆர்வத்தால் Rugby விளையாட்டு கழகத்தில் சகலதுறை ஆட்டக்காரராகவும் இருந்து வருகின்றார்.
அத்துடன், BUILTON எனும் விளையாட்டு அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.ஆனாலும் தனது நடனத்தினை பயிற்றுவிப்பதற்கான தளம் இல்லாமையே காரணமாக அமைவதாக எண்ணுகின்றார்.
பாஸ்கரன் பாரத் அறிவிப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர். அத்தோடு தீபம் TV நடாத்திய பட்டிமன்றங்களிலும் இளைஞர்கள் சார்பில் கலந்துகொண்டுள்ளார்.
அத்தோடு ஒரு புகைப்பட கலைஞராகவும் Quick Video நிறுவனத்தில் இணைந்து அதன் உரிமையானரான வித்தி என்பவரிடம் புகைப்படம் தொடர்பாக விளக்கத்தினை கற்று அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு பல்துறைகொண்ட இம்மைந்தனை எம்புலம்பெயர் தேச அமைப்புகள் கண்டுகொள்ளுமா? கைகொடுக்குமா? இன்று வரை தனக்கான ஒரு அங்கீகாரத்திற்கு போராடு
இவ்வாறு பல்துறைகொண்ட இம்மைந்தனை எம்புலம்பெயர் தேச அமைப்புகள் கண்டுகொள்ளுமா? கைகொடுக்குமா? இன்று வரை தனக்கான ஒரு அங்கீகாரத்திற்கு போராடும் இவரை தமிழ் சமூகம் வழிநடத்துமா?
பல்வேறு திறமைகளுடன் லண்டனில் போராடும் யாழ் இளைஞன்! கை கொடுக்குமா புலம்பெயர் தமிழ் தேசம்? -
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment