பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு -
கலாசார வாழ்க்கை, மக்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை, சுத்தமான காற்று மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் Salisbury நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ரஷ்ய உளவாளி நிகோலாய் குலுஸ்கோ இந்த நகரில் கொலை செய்யப்பட்ட விவகாரம் மூலம் இந்த நகரம் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் இந்த நகரம் தொடர்பாக மக்களுக்கு சற்று அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில் அதிலிருந்து மீண்டு தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
Salisbury நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய உளவாளி நிகோலாய் குலுஸ்கோ நச்சு மருந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இராசயன தாக்குதலில் உலக மக்கள் மத்தியில் அறியப்பட்ட Salisbury நகரம் எப்படி முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழ் எடிட்டர் Helen Davies, கூறியதாவது, என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த நகரம் தனது வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இது ஒரு நல்ல வரவேற்பு கொண்ட இடமாக உள்ளது. கடற்கரைகள் கொண்ட இந்த நகரத்தில், தெற்கே சிறந்த பள்ளிகளும், பெரிய சந்தைகளும் மற்றும் மிகவும் கலாச்சாரமாக உள்ளது. "
மக்கள் வாழ்வதற்கு அனைத்து வகையிலும் இந்த நகரம் சிறப்பான சமூகமாக இருப்பதன் காரணத்தால் இந்த நகரம் முதலிடமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Salisbury நகரத்திற்கு அடுத்தபடியாக பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல் பின்வருமாறு,
- Salisbury, South West
- Greater London: Isle of Dogs, Tower Hamlets
- Midlands: Edale, Derbyshire
- North and North East: York, North Yorkshire
- North West: Kirkby Lonsdale, Cumbria
- Northern Ireland: Holywood, Co Down
- Scotland: Dundee
- South East: Petworth, West Sussex
- South West: Topsham, Devon
- The East: Bury St Edmunds, Suffolk
- Wales: Crickhowell, Powys
பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு -
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment