Brexitஐப் பற்றி பேசாதீர்கள், அடி விழும்: வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை! -
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் ஆசையில் இருந்த மக்களுக்கு கடும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது Brexit குறித்து பேச வேண்டாம் என கட்சி தலைமை வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தெரஸா மேயின் கட்சி 1000 கவுன்சிலர்களின் இடங்கள் வரை இழக்கலாம் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தின்போது Brexit குறித்து பேசினால் கிட்டத்தட்ட அடி விழும் சூழல் நிலவுகிறது.
தெற்கு Gloucestershireஇல் பிரச்சாரத்துக்கு சென்ற Brian Hopkinson (70) என்ற வேட்பாளர் பிடித்து தள்ளப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டுள்ளார்.
போன வாரம் Carla Hales, Colchesterஇல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதோடு, மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார்.
எனவேதான் பிரச்சாரம் செய்வோர் பிரச்சாரத்தின்போது Brexit குறித்து பேச வேண்டாம் என கட்சி தலைமை வேட்பாளர்களை அறிவிறுத்தியுள்ளது.

Brexitஐப் பற்றி பேசாதீர்கள், அடி விழும்: வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை! -
Reviewed by Author
on
May 01, 2019
Rating:
Reviewed by Author
on
May 01, 2019
Rating:


No comments:
Post a Comment