சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட மிகப் பெரும் அச்சுறுத்தல் உள்நாட்டில்! மங்கள தகவல் -
சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் ஏனையவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்பட முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பயங்கரவாதம் இன்று உலகின் அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள பிரதான சவால் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தற்பொழுது சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை விடவும் ஒரு அரசியல் குழுவினால் பாரிய ஆபத்து நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அரசாங்கம் என்ற ரீதியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதனை தாம் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கிலான நபர்கள் சிலர் மீண்டும் கறுப்பு ஜூலை கலவரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தினால் ஏனைய மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகிவிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் இந்த நாட்டின் முதல் தரப் பிரஜைகள் எனவும் ஒரே சமமானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மீண்டும்மொரு தடவை இலங்கை சிங்கள பௌத்த நாடு என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட மிகப் பெரும் அச்சுறுத்தல் உள்நாட்டில்! மங்கள தகவல் -
Reviewed by Author
on
May 15, 2019
Rating:

No comments:
Post a Comment