மடுவிழாவை முன்னிட்டு நீர்கொழும்பிலிருந்து மடுறோட்டுக்கு விஷேட ரயில் சேவை
மன்னார் மடுப் பெருவிழாவை முன்னிட்டு வழமையான கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் பியருக்கு இடம்பெற்று வரும் ரயில் சேவையுடன் இம்முறை நீர்கொழும்பிலிருந்து மடுறோட்டுக்கு விஷேட ரயில் சேவையும் இடம்பெறுகிறது.
எதிர்வரும் 15ந் திகதி மன்னார் மடுத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி விஷேட புகையிரத சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு அன்னையின் ஆலய பெருவிழா ஓகஸ்ட் மாதம் 15ந் திகதி நடைபெறுகின்றது
இவ்விழாவுக்காக இலங்கையில் நாலாப் பக்கங்களிலிருந்தும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழமையாகும்.
இப்பெருவிழாவுக்கு மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் ஆயர் இல்லமும் இணைந்து பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகள்- பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளை செய்வது வழமையாகும்.
இந்த வகையில் இம்முறை இப்பெருவிழாவை முன்னிட்டு மடுவுக்கு விஷேட ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து மடுறோட்டுக்கு வரும் ரயிலானது 15.45 க்கு புறப்பட்டு கம்பாவுக்கு 16.18க்கும் வியான்கொடவுக்கு 16.29க்கும் மீரிகமவுக்கு 16.42க்கும் பொல்காவலவுக்கு 17.05க்கும் குருநாகல்வுக்கு 17.29க்கும் மாகோவுக்கு 18.28க்கும் அனுராதபுரம் 19.50க்கும் மதவாச்சிக்கு 20.20க்கும் செட்டிக்குளம் 20.44க்கும் மடுறோட் 21.07க்கும் ரயில் வந்தடையும்.
இதேவேளையில் தலைமன்னார் பியரிலிருந்து காலை 04.10க்கு புறப்படும் ரயில் மன்னாருக்கு 04.37க்கும் முருங்கனுக்கு 05.02க்கும் மதவாச்சிக்கு 06.00க்கும் அனுராதப்புரத்திற்கு 06.25க்கும் மாகோவுக்கு 07.38க்கும் குருநாகலுக்கு 08.35க்கும் பொல்காவலவுக்கு 08.59க்கும் கம்பஹாவுக்கு 09.46க்கும் கொழும்பு கோட்டைக்கு 10.19க்கு இந்த ரயில் சேவை நாளாந்தம் நடைபெறுகின்றது
இது இவ்வாறு இருக்க மடு விழாவை முன்னிட்டு விஷேட ரயில் சேவையாக 13.08.2025 அன்று நீர்கொழும்பிலிருந்து 21.00 மணிக்கு பறப்படும் ரயில் அனுராதபுறத்துக்கு 02.00 மணிக்கும் மடுறோட்டுக்கு 3.22 மணிக்கு வந்தடையும்
பின் இந்த விஷேட சேவை 15.08.2025 அன்று மடுறோட்டிலிருந்து 16.00 மணிக்கு பறப்பட்டு அனுராதப்புரத்திற்கு 17.00 மணிக்கும் நீர்கொழும்புக்கு 22.50க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment