3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கனுமா?
இருப்பினும் எடையை குறைப்பதற்கு சில எளிய டயட் முறைகளும் இருக்கிறது.
அதில் 8 மணி நேர டயட் என்பது எல்லா டயட் முறைகளிலும் மிகவும் எளிய முறை ஆகும்.
ஏனெனில் 10 மணி முதல் 6 மணி வரை உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள். மீதி 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது
இந்த உணவு முறை மூலம் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கலாம்.
இந்த டயட் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், பாட் கொழுப்புக்களைக் குறைக்கவும் உதவும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த டயட்டை எப்படி பின்பற்றலாம் என பார்ப்போம்.
என்ன சாப்பிடலாம்?
- அனைத்து வகை பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடலாம்.
- புரோட்டினுக்கு பீன்ஸ், சோயா, பரப்பு வகைகள், முட்டை, மீன், சிக்கனின் மார்பு போன்றவற்றை சாப்பிடலாம்.
- கோதுமை, பழுப்பு அரிசி, குயினோ போன்றவற்றை சாப்பிடலாம்.
- அனைத்து வகை பால் பொருட்களையும் சாப்பிடலாம்.
- உங்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தாத எந்த மசாலாப் பொருளையும் பயன்படுத்தலாம்.
என்ன சாப்பிடக்கூடாது?
- கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை தவிர்க்கவும்.
- குறிப்பாக தேங்காய் எண்ணெய், பன்றிக்கொழுப்பு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- மது அருந்துபவராக இருந்தால் அதனை குறிப்பிட்ட அளவில் மட்டும் அருந்தவும்.
- அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
டயட்டின் பலன்கள்
- உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்புக்களை வெளியேற்றும்.
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
- உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.
- உடலில் அதிகமாக இருக்கும் நீரை வெளியேற்றுகிறது.
- டைப் 2 டையாபிடிஸ் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
- ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது.
- ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பக்க விளைவுகள்
டயட்டின் ஆரம்ப காலத்தில் சோர்வு, அடிக்கடி மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிடுவது, ஆபத்தான நொறுக்குதீனிகளை சாப்பிடுவது எடை குறைப்பிற்கு வழிவகுக்காது.
3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கனுமா?
Reviewed by Author
on
August 02, 2019
Rating:

No comments:
Post a Comment