அண்மைய செய்திகள்

recent
-

டிக்டொக் நிறுவனத்திற்கு 600 மில்லியன் டொலர்கள் அபராதம்

 சமூக ஊடக தளமான டிக்டாக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது.


ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய அபராதமாகும்.


2021இல் தொடங்கிய விசாரணையில், டிக்டொக் தரவுகளை சீன சேவையகங்களில் சேமித்ததை ஒப்புக்கொண்டது. 485 மில்லியன் யூரோ தரவு மாற்ற மீறலுக்காகவும், 45 மில்லியன் யூரோ வெளிப்படைத்தன்மை இன்மைக்காகவும் விதிக்கப்பட்டது.


டிக்டொக் ஆறு மாதங்களுக்குள் GDPR விதிகளுக்கு இணங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


டிக்டொக் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், “ப்ராஜெக்ட் க்ளோவர்” திட்டத்தின் மூலம் தரவு பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும் கூறுகிறது. இந்த அபராதம், ஐரோப்பாவில் உலகளாவிய நிறுவனங்களுக்கு கடுமையான தரவு ஒழுங்குமுறைகளை வலியுறுத்துகிறது.  



டிக்டொக் நிறுவனத்திற்கு 600 மில்லியன் டொலர்கள் அபராதம் Reviewed by Vijithan on May 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.