Cut, Copy, Paste கண்டுபிடித்த கணினி விஞ்ஞானி லேரி டெஸ்லர் காலமானார் -
1960களில் பெரும்பான்மையான மக்கள் கணினியை அணுக முடியாத நேரத்தில் டெஸ்லர் முற்பகுதியில் சிலிக்கான் வேலியில் பணியாற்றத் தொடங்கினார்,
முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர், இன்று கணினியை எளிமையாக பயன்படுத்த உதவும் கட், காப்பி மற்றும் பேஸ்ட் கட்டளைகளை கண்டுபிடித்தவர். டெஸ்லர் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை கழித்த ஜெராக்ஸ் நிறுவனம் அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
கட், காப்பி மற்றும் பேஸ்ட், பைன்ட் அன்ட் ரிபிலேஸ் மற்றும் பலவற்றைக் கண்டுபிடித்தவர், முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் ஆவார். உங்கள் வேலை நாள் எளிதாகும் புரட்சிகர கருத்துக்களுக்கு நன்றி என்று ஜெராக்ஸ் நிறுவனம் ட்வீட் செய்தது.
டெஸ்லர் 1945ல் நியூயார்க்கின் பிராங்க்ஸில் பிறந்தார், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
பட்டம் பெற்ற பிறகு, அவர் யூசர் இன்டர்பேஸ் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றார். அதாவது கணினி அமைப்புகளை அதிக பயனருக்கு எளிதாக மாற்றினார். அவர் தனது நீண்ட தொழில் வாழ்க்கையில் பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினார்.

ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் பணியை தொடங்கிய டெஸ்லர், பின்ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்காக 17 ஆண்டுகள் பணியாற்றி தலைமை விஞ்ஞானியாக உயர்ந்தார்.
ஆப்பிளை விட்டு வெளியேறிய பிறகு அவர் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்தார், மேலும் அமேசான் மற்றும் யாகூவில் குறுகிய காலங்களில் பணியாற்றினார்.
Cut, Copy, Paste கண்டுபிடித்த கணினி விஞ்ஞானி லேரி டெஸ்லர் காலமானார் -
Reviewed by Author
on
February 21, 2020
Rating:
No comments:
Post a Comment