கடலிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்றதாவும், அதில் ஒரு இளைஞனே காணாமல் போயிருந்ததாகவும் தெரிய வருகின்றது. ஏனைய இருவரும் மீட்கப்பட்டிருந்த நிலையில் இவர் மீட்கப்பட்டுள்ளார்.
புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில் வசிக்கும் முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி (20 வயதுடைய) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடலிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்!
Reviewed by Author
on
December 05, 2020
Rating:

No comments:
Post a Comment