வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்திற்கு எதிரான வழக்கு மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட் உதைபந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவர் நாகராஜன் உள்ளடங்களாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தின் தெரிவு பிழை எனவும், இலங்கை உதைபந்தாட்ட சம்ளேனத்தின் பிரதி நிதிகள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர் உள்ளிட்ட சில காரணங்களை முன் வைத்து வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் தலைவரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(4) விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது வழக்கு தொடுனர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த வழக்கை எவ்வித காரணம் இன்றி மீளப் பெற்றுக்கொண்டார்.
-மேலும் எதிராளிகளுக்கு வழக்கு செலவாக 9 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு கடந்த 27-7-2019 அன்று இடம் தேர்தல் மூலம் இடம் பெற்றது.
குறித்த தேர்தல் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளது.
குறித்த தேர்தலில் 21 விளையாட்டு கழகங்களை சேர்ந்த 63 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு விளையாட்டுக்கழகம் வாக்களிக்க தகுதி அற்ற நிலையில் காணப்பட்டது.ஏனைய 20 கழகங்களைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் புதிய நிர்வாக தெறிவிற்கு வாக்களித்தனர்.
-இதன் போது 36 வாக்குகளை பெற்று புதிய தலைவராக நாகராஜன் தெரிவு செய்யப்பட்டார் .முன்னாள் தலைவர் 26 வாக்குகளை பெற்றார்.
மேலும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களாக புதியவர்களே தெரிவு செய்யப்பட்ட நிலையில் பழைய நிர்வாக உறுப்பினர்கள் அனைத்து பதவிகளில் இருந்தும் தோற்கடிக்கப்பட்டனர்.
-இந்த நிலையிலே தேர்தல் இடம் பெற்று புதிய நிர்வாக தெரிவின் ஊடாக வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் 16 மாதங்களில் பின்னர் குறித்த நிர்வாக தெரிவு பிழை என வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகளுடன் தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியை பெற்று கடந்த வருடம் 75 இலட்சம் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டத்தில் உதைபந்தாட்ட நடவடிக்கைகளுக்காக உதவிகளை மேற்கொண்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள முன்னனி விளையாட்டுக்கழகங்கள் மற்றும் இலங்கை உதைபந்தாட்ட சம்ளேனத்தின் ஆதரவுடன் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் தற்போது வரை செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்திற்கு எதிரான வழக்கு மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டது.
Reviewed by Author
on
December 05, 2020
Rating:

No comments:
Post a Comment