அண்மைய செய்திகள்

recent
-

5 ஜி (5G) தொழில்நுட்பத்தினை மன்னாரில் அறிமுகம் செய்வது தொடர்பான மன்னார் பொறியியலாளர் சம்மேளனத்தின் அறிக்கை

அண்மையில் மன்னார் பொது வைத்தியசாலையின் எதிரே அமைக்கப்பட்டுள்ள 5 ஜி (5G) தொலைத்தொடர்பு கோபுரம் தொடர்பாக மக்கள் மத்தியில் தோன்றியுள்ள முரண்பாடான கருத்துக்கள் தொடர்பிலும் அதில் எமது தலையீடு தொடர்பிலும் தெளிவு படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். 

 இந்த கோபுரத்தை அமைப்பதற்கான அனுமதியை மன்னார் நகரசபையானது மன்னார் பொறியியலாளர் சம்மேளனமாகிய எம்முடன் கலந்தாலோசித்தே வழங்கியதாக சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இவை முற்றிலும் பொய்யான தகவல் என்பதை இத்தால் அறியத்தருகின்றோம். மன்னார் நகர சபையோ அல்லது வேறு எந்த அரச/தனியார் நிறுவனமோ இந்த 5 ஜி தொழில்நுட்பம் தொடர்பாக இதுவரை எம்முடன் கலந்துரையாடவோ அறிவுரை பெறவோ இல்லை. 

  மன்னாரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அமைப்பு என்கின்ற அடிப்படையில், மன்னாரின் அபிவிருத்தியில் எவ்வளவு சிரத்தை உள்ளதோ அதேபோல் மன்னாரில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தித்திட்டமும் மன்னாரின் வளங்களையோ அல்லது மக்களையோ பாதிக்கக்கூடாது என்பதிலும் எமக்கு அக்கறையுண்டு. 

  இதன் அடிப்படையில் இந்த 5 ஜி தொழில் நுட்பம் மன்னாரிற்கு தேவைதானா? இதனால் மக்களுக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுமா?எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும்? என்பன தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடு மன்னாரின் பொறியியலாளர்களாகிய எமக்குண்டு. உரிய தொழில் நுட்பவல்லுனர்களுடனும் துறைசார் பொறியியலாளர்களுடனும் கலந்தாலோசித்து இது தொடர்பான ஒரு பூரண அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளோம். அதுவரை எங்களுடன் தொடர்புடையதாக பரப்பப்படும் எந்த வதந்திகளையும் நம்பவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 நன்றி





5 ஜி (5G) தொழில்நுட்பத்தினை மன்னாரில் அறிமுகம் செய்வது தொடர்பான மன்னார் பொறியியலாளர் சம்மேளனத்தின் அறிக்கை Reviewed by Author on January 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.