கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று நாடளாவிய ரீதியில்...
இராணுவ நோய்த்தடுப்பு வைத்தியர் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சவீன் சேமகே, விமான நிலையத்தில் கொவிட் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான பிரிகேடியர் லால் விஜயதுங்க மற்றும் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தின் முதல் மருத்துவ அதிகாரியான வைத்தியர் பசிந்து பெரேராவுக்கும் இந்த கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது, கொரோனா ஒழிப்புக்காக முன்னிலையில் செயற்படுகின்ற கிட்டத்தட்ட 150,000 சுகாதார ஊழியர்கள், 120,000 முப்படையினர் மற்றும் பொலிசார் உட்பட பாதுகாப்பு பிரிவினருக்கு முதலாவதாக வழங்கப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் 6 பிரதான வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
அமைச்சின் தொற்று நோய் தொடர்பான பிரிவின் தலைவர் டொக்டர் சுதத் சமரவீர இதனை தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றியமையால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்னிலை வகிக்கும் துறையினர் இன்று தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். நாடளாவிய ரீதியில் இன்று (30) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று நாடளாவிய ரீதியில்...
Reviewed by Author
on
January 30, 2021
Rating:
Reviewed by Author
on
January 30, 2021
Rating:


No comments:
Post a Comment