அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பிரார்த்தனை வாரம் ஆரம்பம்

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வழியுறுத்தியும் அவர்களை பொங்களுக்கு முன்பாக இந்த அரசாங்கம் பொது மன்னிப்பிலோ அல்லது பிணையிலோ விடுதலை செய்க கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று தொடக்கம் எதிர்வரும் 14ம் திகதி வரை கறுப்பு மஞ்சள் கொடிகளை வீடுகளில் கட்டி மதஸ்தலங்களில் பிரார்த்தனை வாரம் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் முதல் நாளான இன்று(8) காலை ஏழு மணி முதல் மன்னார் பள்ளிமுனை மற்றும் ஈச்சளவாக்கை பகுதிகளிலும் மாலை பேசாலை பகுதியிலும் அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் கறுப்பு மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டும் பொங்கல் பொங்கியும் செப வழிபாடுகளுடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகின்றது 

 நாளைய தினமும் மன்னார் மாவட்டம் உட்பட தமிழர் தயக பகுதிகளில் உள்ள கிராமங்களில் பிராத்தனை வாரத்தை அனுஸ்ரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












மன்னாரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பிரார்த்தனை வாரம் ஆரம்பம் Reviewed by Author on January 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.