அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண மக்களுக்கான அறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் மத்தியில் தற்பொழுது வாழ்வோரின் பெயர், 2020 ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, சம்பந்தப்பட்டவர்கள் தற்பொழுது வடக்கு மாகாணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால் தற்போது எந்தவொரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும், ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்காக அந்த தேர்தல் மாவட்ட அலுவலத்தின் மூலமும் சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் விண்ணப்பப்படிவத்தை www.election.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். 

 இந்த விண்ணப்பங்கள் 2021.01.05 ஆம் திகதி தொடக்கம் 2021.02.01 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். அத்தோடு சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை சரியாக பூர்த்தி செய்து நீங்கள் தற்பொழுது பதிவை கொண்டுள்ள பிரதேசத்திற்கான கிராம உத்தியோத்தரின் சிபாரிசுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உதவி பதிவு அதிகாரியிடம் 2021.02.01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேபோன்று கீழ் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பதிவை கொண்டிருந்த தற்பொழுது தொழில், கல்வி அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக வெளிநாடுகளில் இருப்பவர்களின் தகவல்கள் சம்பந்தப்பட்ட படிவத்தில் உள்ளடக்கி, அந்த நபரின் நெருங்கிய உறவினர் ஒருவர் அட்டோனி அதிகாரம் கொண்டவரினால் கைச்சாத்திடப்பட்டு 2021.02.01 கையளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு குடும்பத்தினரும் வெளிநாடுகளில் இருப்பார்களாயின், அவர்களின் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட நாட்டின் இலங்கை தூதர அலுவலகத்தின் மூலம் 2021.02.01 திகதி அல்லது அதற்கு முன்னர் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வட மாகாண மக்களுக்கான அறிவித்தல் Reviewed by Author on January 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.