அண்மைய செய்திகள்

recent
-

காரைக்காலில இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த .4 கோடி மதிப்புள்ள கஞ்சா மீட்பு

 காரைக்காலில இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த .4 கோடி மதிப்புள்ள கஞ்சா, கடத்தலுக்கு பயன்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பறிமுதல் செய்தனர்.


 மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  


புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், கீழக்காசாக்குடி லெட்சுமி நகரில்  கடந்த 16ஆம் தேதி ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ  கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


 குறிப்பிட்ட இடத்தில் கஞ்சா குடோனாக இயங்கிய வீட்டை முதுநிலை கண்கணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா நேரடி பார்வையில் போலீசார் சோதனை செய்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


 இலங்கைக்கு படகுமூலம் கடத்த வசதியாக மூட்டைகளுடன் பதுங்கியிருந்த  இருவரையும், கைது செய்தனர்.


 இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்காலுக்கு, இலங்கைக்கும் இடையே மிகப்பெரிய கஞ்சா மாபியாக்கள் நடமாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.


மேற்படி குற்றவாளிகளுக்கு மூட்டை மூட்டையாக லாரிகள், கார்களில் கஞ்சா லோடுகளை அனுப்பி வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.


 இலங்கையிலிருந்து மீனவர்கள் அவ்வப்போது இரவோடிரவாக சிறிய படகுகளில் காரைக்கால் வந்துள்ளனர்.


 காரைக்காலிலிருந்து படகில் கஞ்சாவை ஏற்றி இலங்கைக்கு அவர்கள் கடத்தியும் வந்துள்ளனர். 



இவர்களை பிடிப்பதற்காக போலீசார், கஞ்சா வியாபாரிகளை போல பேசி இலங்கையிலிருந்து படகில் வரவழைத்தனர்,ஸ்ர.


கீழகாசாக்குடி எமரால்டு பீச்சுக்கு 10 கடல் மைல் தொலைவில் இந்த மீனவர்களை முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா தலைமையிலான கடலோர காவல் போலீசார் கைது செய்து, படகுடன் கரைக்கு கொண்டு வந்தனர். 



இது தொடர்பாக கஞ்சா கொள்முதலுக்கு காரைக்காலை நோக்கி இரவு நேரத்தில் படகில் வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த யகையா முகமது(40), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வகுமார்( 40) இருவரையும் போலீசார் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


 அவர்கள் வந்த படகையும் கடலோர காவல் போலீசார் பறிமுதல் செய்தனர். 


இலங்கையில் இருந்து இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் போலீசாருக்கு சந்தேகம் எழாதபடி, சிறு  படகுகளில் வந்து கஞ்சா கடத்தலை செய்து வந்துள்ளனர். 


நடுக்கடலில் சிக்கல் நேருமானால் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசிவிட்டு படகில் பறந்து மறைந்தும் வந்துள்ளனர். 


காரைக்காலில் கஞ்சாவை புழங்க விடுவதில் இதுவரை சிறு, குறு வியாபாரிகளே சிக்கி வந்துள்ளனர். ஆனால் ஒரே நேரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கஞ்சா பிடிபட்டது.


 இதுவே முதல்முறை. கடந்த வாரம் கஞ்சா குடோனை வளைத்து, கஞ்சா வியாபாரிகளை கைது செய்து, முக்கிய வியாபாரி வேலூர் கிஷோரையும், இலங்கை கஞ்சா கடத்தல்காரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பெண் ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி சவுஜன்யாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


 

இன்று காரைக்கால் வந்து கடற்கரை கிராமங்கள், மீன்பிடித்து துறைமுகம், கடலோர காவல் நிலையத்தை ஆய்வு செய்த புதுச்சேரி காவல் டிஐஜி சத்தியசுந்தரம், மிகப்பெரிய கஞ்சா வலைப்பின்னல்களை மொத்தமாக சுருட்டிப்போட்ட போலீஸ் படையினரை நேரில் சந்தித்து பாராட்டினார்.


 இது ஆரம்பம்தான். காரைக்காலில் எந்த ரூபத்திலும் சமூக விரோத செயல்கள் தலை தூக்காமல் இருப்பதற்கு போலீசார் விழிப்போடு இயங்கி கொண்டிருக்கின்றனர். கடற்பரப்பில் அசாதாரணமான நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தர மீனவர்களுக்கு பயிற்சியும் தந்திருக்கிறோம். 



இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு  அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளோம். இனி இதுபோல் நிகழாதபடி புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடற்பரப்பினை வலுவான கண்காணிப்புக்கு உட்படுத்தியிருக்கிறோம்.

புதுச்சேரி கடலோர காவல் போலீசாருடன் சைபர் க்ரைம், மாநில நுண்ணறிவுப் போலீசாரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.


 இதன் மூலம் அதிவிரைவு தகவல் பரிமாற்றத்துடன் குற்றவாளிகளை கண்காணிக்கவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வினை உறுதி படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்தார்.











காரைக்காலில இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த .4 கோடி மதிப்புள்ள கஞ்சா மீட்பு Reviewed by Vijithan on July 27, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.