மன்னாரில் விலங்குகளை வேட்டையாட சட்ட விரோதமான முறையில் அமைத்த மின்சார இணைப்பில் சிக்கி இரண்டு குடும்பஸ்தர்கள் பலி.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார்-யாழ்ப்hணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமான முறையில் அமைத்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை (29) காலை குறித்த இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பிரதேச வாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் சடலம் மீட்கப்பட்டது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் விலங்குகளை வேட்டையாட சட்ட விரோதமான முறையில் அமைத்த மின்சார இணைப்பில் சிக்கி இரண்டு குடும்பஸ்தர்கள் பலி.
Reviewed by Author
on
January 29, 2021
Rating:
Reviewed by Author
on
January 29, 2021
Rating:









No comments:
Post a Comment