ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அதனடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு, கோட்டை முதல் பொல்கஹவெல வரையிலான ரயில் சேவை, கொழும்பு கோட்டை முதல் குருநாகல் வரை பயணிக்கும் ரயில் சேவை, பெலிஅத்த முதல் மருதானை வரையிலான காலி குமாரி ரயில்கள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
மாத்தறை முதல் மருதானை வரை பயணிக்கும் ருகுணு குமாரி ரயில் நாளை முதல் சேவையில் ஈடுபடும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.
அத்துடன், அளுத்கம – மருதானை வரையிலான அலுவலக ரயில், பெலிஅத்த – மருதானை வரையிலான கடுகதி ரயில் சேவை, அளுத்கம – மருதானை வரையிலான ரயில் சேவை, கோட்டை – புத்தளம் வரையிலான ரயில் சேவை மற்றும் கோட்டை – அநுராதபுரம் வரையிலான ரயில் சேவை ஆகியன நாளை முதல் மீண்டும் இயங்கவுள்ளன.
ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Author
on
January 06, 2021
Rating:

No comments:
Post a Comment