தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை- அஜித் ரோஹன
பொலிஸ் சேவைக்கான ஆளணியை அதிகரிப்பது தொடர்பாக யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், சுதந்திரமான, ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ் மொழியில் இணைத்துக் கொள்பவர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த தமது சொந்த மாவட்டங்களிலே கடமைபுரிய வழியேற்படுத்தப்படும் என்று்ம அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை- அஜித் ரோஹன
Reviewed by Author
on
April 23, 2021
Rating:

No comments:
Post a Comment