அண்மைய செய்திகள்

recent
-

AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மன்னார் மாணவன்.

 >AIA 30 வது உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த  31 ஆம் திகதி, கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் (கிங்க்ஸ் கோர்ட்) மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.


இந்த விருது, 2017 ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று, 2024 ஆம் ஆண்டு சாதாரண தர (O/L) பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும்ஒரு மாணவர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


மன்னார் மாவட்டத்தில் இந்த விருது A.நயோலன் அபிஷேக் என்பவருக்கு வழங்கப்பட்டது. 


இவர் மன்/ புனித. சவேரியார்  ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். 2017ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட ரீதியில் முதலிடம் மற்றும் மாகாண ரீதியில் மூன்றாம் இடம் பெற்றதுடன், 2024ஆம் ஆண்டு O/L பரீட்சையில் 9A பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளார்.


இந்த நிகழ்வில் கெலனிய பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பீடத்தை (Postgraduate Institute of Archaeology) சார்ந்த மூத்த பேராசிரியரும் இலங்கை தொல் பொருளியலாளர் கவுன்சிலின் மூத்த உறுப்பினருமான ராஜ்குமார் சோமதேவ அவர்கள் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்




AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மன்னார் மாணவன். Reviewed by Vijithan on April 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.