அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முன்னை நாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை க்கு அஞ்சலி.

 காலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு  ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை (2) காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.


  மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின்   ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன் இடம் பெற்றது.


  மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில்  முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு  ஆண்டகையின்   உருவச் சிலைக்கு அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார் உள்ளடங்களாக அருட்சகோதரி,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சமூக சம நீதிக்காய் தமிழ் தேசிய உணர்வுடன் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குரலாக பல சவால்களுக்கு மத்தியிலும் இன உணர்வுடன் இன உணர்வுக் காய் அறப்பணி புரிந்தார்.


நீண்ட காலமாய் சுகயீனமடைந்திருந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு  இராயப்பு ஜோசப் ஆண்டகை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி இயற்கை எய்தமையும் குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் முன்னை நாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை க்கு அஞ்சலி. Reviewed by Vijithan on April 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.