மன்னார் அரசாங்க அதிபரை அவமானப்படுத்தும் இலங்கை போக்கு வரத்து மன்னார் சாலை-பாவனைக்கு உதவாத பஸ்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர் -வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரையில்
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பஸ்ஸின் நிலை ஏற்கனவே அறிந்த விடயமே.இந்நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு Mar 31, 2021 அன்று நேரில் சென்று விசாரித்திருந்தார் மற்றும் DCC meeting இலும் கதைக்கப்பட்டது. இருந்தும் நேற்று (21/04/2021) காலை 10.30 மணிக்கு வவுனியாவிலிருந்து மன்னாருக்கு சென்ற CTB பஸ்ஸின் நிலை முள்ளிவாய்க்காலில் செல் விழுந்த பஸ் போல் உள்ளது.
மேலும் இவ்வாறான பஸ்களை மீண்டும் பயன்படுத்துவது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரையும் மக்களையும் அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.
இதேவேளை அரசியல் வாதிகளின் வாலைப்பிடித்து வேலை பெறுபவர்களினால் தான் இன்று மன்னார் மாவட்டத்தின் நிலை பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றது.

No comments:
Post a Comment