அண்மைய செய்திகள்

recent
-

கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் எழுதிய 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வைபவ ரீதியாக மன்னாரில் வெளியிட்டு வைப்பு.

முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் எழுதிய 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. -குறித்த வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி தம்பு மங்கலேஸ்வரன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரி.விக்ன ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

 இதன் போது 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. -குறித்த நிகழ்வில் வவுனியா வளாக வியாபார கற்கை பீட பீடாதிபதி கலாநிதி வை.நந்த கோபன், நிதியியல் மற்றும் கணக்கியல் துறை தலைவர் கலாநிதி திருமதி கே.கலைநாதன், பொருளியல் மற்றும் முகாமைத்துவ துறை தலைவர் திருமதி பௌலினா கோட்வின், வவுனியா வளாக சிரேஸ்ட நூலகர் எஸ்.சன்முகதாசன், முது நிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.விஜயன் உற்பட திணைக்கள தலைவர்கள், அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் எழுதிய 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வைபவ ரீதியாக மன்னாரில் வெளியிட்டு வைப்பு. Reviewed by Author on April 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.