யாழில் கொரோனா பாதிப்பு 5,000ஐ நெருங்கியது- உயிரிழப்பும் அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயதுடைய பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குருநகரில் ஜே-69 கிராம சேவகர் பிரிவான ரெக்குலமேசன் மேற்கு மற்றும் ஜே-71 கிராம சேவகர் பிரிவான குருநகர் மேற்கு பகுதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரினால் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு பரிதுரைக்கப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த பகுதிகளைத் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழில் கொரோனா பாதிப்பு 5,000ஐ நெருங்கியது- உயிரிழப்பும் அதிகரிப்பு!
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment