இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் காணப்பட்ட சுறா துடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த சரக்கு வாகனத்தை திருப்புல்லாணி அருகே தேவிபட்டினம் மெரைன் பொலிஸார் நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் தலா 30 கிலோ வீதம் 15 மூடைகளில் இருந்த 450 கிலோ தடைசெய்யப்பட்ட சுறா இறக்கை, தலா 50 கிலோ வீதம் 5 மூடைகளில் இருந்த 250 கிலோ ஏலக்காய் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து வாகன சாரதியிடம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த பொருட்களை கீழக்கரை சேர்ந்த காசிம் முகமது என்பவரது குடோனுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், காசிம் முகமது குடோனை பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு பதப்படுத்திய நிலையில் இருந்த 55 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இப்பொருட்கள் அனைத்தும் மருத்துவ பயன்பாட்டிற்காக கீழக்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது என விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த காசிம் முகமது, முகமது மீரா சாகிப், சாகப்தீன் சாகிப், மண்டபத்தைச் சேர்ந்த இம்ரான் கான், சேதுக்கரையைச் சேர்ந்த ஹபீப் உசேன் ஆகியோரை கைது செய்த மெரைன் பொலிஸார்; தமிழகத்தில் இருந்து கடத்தல் பொருட்களை இலங்கைக்கு கடத்தும் முக்கிய ஏஜென்ட் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.குறித்த பொருட்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் காணப்பட்ட சுறா துடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
Reviewed by Author
on
June 28, 2021
Rating:

No comments:
Post a Comment