மன்னார் இலுப்பைக்கடவையில் கிராம அலுவலகர் கொலை தொடர்பான சந்தேக நபர் பிணையில் செல்ல மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி-
 இலுப்பைக் கடவை   கிராம  அலுவலகரின் கொலையுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில்   விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
-இதன் போது குறித்த சந்தேக நபர் குறித்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக பிணை விண்ணப்பம்  தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
குறித்த பிணை விண்ணப்பத்தின் கட்டளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) வழங்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார்.
-குறித்த கட்டளையின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை விதி விளக்கான காரணமாகக் கொண்டும், நாட்டில் அதி வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்றை மன்று தனது மேலான கருத்தில் கொண்டும்  குறித்த சந்தேக நபரினை 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான றொக்கப் பிணையிலும், இரண்டு சரீர பிணையிலும்  செல்லவும்,இருவரில் ஒருவர் மனு தாரராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்,மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இலுப்பைப்படவை பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் 12 மணி வரையுமான நேரத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் செல்ல குறித்த சந்தேக நபர் மன்னார் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் மன்றில் முன் வைக்கவில்லை.
-இதனால் ஆதாரங்கள் எவையும் நிரூபிக்க முடியாத நிலையில் சட்டத்தரணிகளினால் மன்றில் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில்,குறித்த சந்தேக நபர் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.என சட்டத்தரணி எஸ்.டினேஸன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் இலுப்பைக்கடவையில் கிராம அலுவலகர் கொலை தொடர்பான சந்தேக நபர்  பிணையில் செல்ல மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி-
 Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating: 




 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment