மன்னாரில் மேலும் வழங்கப்பட்ட 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகள் நாளை புதன் கிழமை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் சமூகத்தடுப்பூசி வழங்களினுடைய 2 ஆவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3 ஆவது கட்டம் இடம் பெற்று வருகின்றது.
2 ஆவது கட்டத்தில் பாதுகாப்பு படையினரால் வினியோகிக்கப்பட்ட 5 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்,தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று திங்கட்கிழமை வரை கிடைக்கப்பெற்ற 20 ஆயிரம் 'பைஸர்' தடுப்பூசிகளில் 19 ஆயிரத்து 500 வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.எஞ்சியுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்களுடன் தொடர்பு படுகின்ற மன்னார் மீனவர்களினால் ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது.
-மேலும் நேற்று திங்கட்கிழமை(12) இரவு எமக்கு மேலும் 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவற்றினுடைய வினியோகம் நாளை புதன் கிழமை (14) முதல் ஆரம்பமாகும்.குறித்த தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் 5 அல்லது 6 நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.
-இதன் போது 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறந்தர வதிவுரிமை பெற்ற அனைவரும் எந்த நிலையத்திலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
-2 ஆம்,3 ஆம் நிலைய கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர் வரும் வாரத்தில் இடம் பெறும்.
இவர்கள் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையில்லை.இவர்களுக்கு விசேட விதமாக வேறு நிலையங்களில் எதிர் வரும் வாரம் வழங்கப்படும்.
-இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 899 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 882 பேர் இந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த மாதத்தில் தற்போது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்
.
.
மன்னாரில் மேலும் வழங்கப்பட்ட 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகள் நாளை புதன் கிழமை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
Reviewed by Author
on
July 13, 2021
Rating:
Reviewed by Author
on
July 13, 2021
Rating:


No comments:
Post a Comment