ஆப்கானிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது நாட்டிற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. இதனிடையே, ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வௌிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த நாடுகளின் தூதுவர்களுடனான கலந்துரையாடலின் போது ஆப்கானிலுள்ள இலங்கையர்களுக்காக ஆதரவு தருமாறு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள 86 இலங்கையர்களில் இதுவரை 46 பேரை அங்கிருந்து வௌியேற்றியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 20 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் 20 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
Reviewed by Author
on
August 22, 2021
Rating:

No comments:
Post a Comment