அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்க வேண்டும் : யாழ். அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அவசியம். எனவே பொதுமக்கள் மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அரசாங்க அதிபர் க.மகேசன் கேட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 4 மணி வரையான 24 மணி நேரத்தில் 375 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதேசமயம் 15 ஆயிரத்து 164 பேர் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 கிராம சேவை யாளர் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர் நேற்று நடத்திய விசேட சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

 இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் தடுப்பு செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய ஒன்றுகூடல்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளும் கட்டுப்படுத்தப்ட்டுள்ளன. 

மேலும் மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். இதன்போது சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், தேவையற்ற நடமாட்டம், ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டும். எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட வயதுக்கு மேற் பட்டவர்களில் மொத்தமாக 2 இலட்சத்து 89 ஆயிரத்து 855 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர். 

தொடர்ச்சியாக தடுப் பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. வயோதிபர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்படுகின்றது. இதில் இராணுவத்தினரும் கைகோர்த்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக்கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப் படுத்தும். எமது இறப்புகளை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் சமூகத்தையும் பாதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்க வேண்டும் : யாழ். அரச அதிபர் Reviewed by Author on September 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.