அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் மிகவும் ஆபத்தான நோய்

இலங்கையில் கொவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி Multi system inflammatory syndrome யுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது. கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின் சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது, ​​இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.

 காய்ச்சலால் ஏற்படுவதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதாகவும் கண்கள் சிவத்தல், நாக்கு சிவத்தல் மற்றும் சருமத்தில் சிவப்பு நிற தழும்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மூளை கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தையும் பாதிக்கலாம். இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த நோய் சிறுவர்களுக்கு மத்தியில் இனங்காணப்பட்டாலும், கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதியவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் மிகவும் ஆபத்தான நோய் Reviewed by Author on September 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.