அண்மைய செய்திகள்

recent
-

நியூசிலாந்து சட்டங்கள் காரணமாக தாக்குதலை மேற்கொண்ட இலங்கை பிரஜை குறித்த தகவலை வெளியிட முடியாத நிலை- நியுசிலாந்து அதிகாரிகள்

நியுசிலாந்தின் நீதிமன்ற சட்டங்கள் காரணமாக இன்று கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் குறித்த விபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011 இல் ஓக்டோபரில் இந்த நபர் நியுசிலாந்து சென்றுள்ளார். 2016 இல் அவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர் என அடையாளம் காணப்பட்டார். அவரது கொள்கை காரணமாக அவர் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டார்,உன்னிப்பாக அவதானிக்கப்பட்டார்.பல பாதுகாப்பு அமைப்புகளிற்கு அவரை தெரிந்திருந்தது,அவர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

 வெள்ளிக்கிழமை வரை அவர் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.அந்த நபரின் முக்கிய நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவரை தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தபோதிலும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது? நீங்கள் ஒருவரை ஏழுநாட்கள் 24 மணித்தியாலங்கள் கண்காணிக்கின்றீர்கள் என்றால், அவருக்கு அருகில் எப்போதும் நாங்கள் இருக்க முடியும் என்று அர்த்தமல்ல என பொலிஸ் ஆணையாளர் அன்றூ கோஸ்டர் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு தரப்பினர் இன்று தங்களால் எவ்வளவு வேகமாக தலையிட முடியுமோ அவ்வளவு வேகமாக தலையிட்டனர் மிகவும் பயங்கரமான நிலையில் அவர்கள் மேலும் காயங்களை தவிர்த்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தான் கண்காணிப்டுவதை நன்கு அறிந்திருந்தார் அதனை தெரிந்தவராயிருந்தார் அதனால் அவரிடமிருந்து சற்று தொலைவிலிருந்தே அவரை கண்காணிக்கவேண்டிய நிலையில் பாதுகாப்பு தரப்பினர் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர் தனித்தே செயற்பட்டார் என கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்து சட்டங்கள் காரணமாக தாக்குதலை மேற்கொண்ட இலங்கை பிரஜை குறித்த தகவலை வெளியிட முடியாத நிலை- நியுசிலாந்து அதிகாரிகள் Reviewed by Author on September 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.